நோ பார்க்கிங் பகுதியில் நின்ற கேரள முதல்வர் மனைவியின் காருக்கு ரூ.100 அபராதம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் மனைவி மரியாவின் காருக்கு போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் ரூ.100 அபராதம் விதித்தார். அந்த பணத்தை உடனடியாக செலுத்துமாறு முதல்வர் தனது டிரைவரை கேட்டுக் கொண்டார்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் மனைவி மரியா உம்மன். நேற்று முன்தினம் அவர் கார் டிரைவரை கடையில் சில பொருட்கள் வாங்க அனுப்பியிருந்தார். இதையடுத்து டிரைவர் காரை எடுத்துக் கொண்டு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பு பகுதிக்கு சென்றார். டிரைவர் காரை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க கடைக்குள் சென்றுள்ளார். இதை கவனித்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அந்த காருக்கு அபராதம் வசூலிக்க ஸ்டிக்கரை ஒட்டினார். டிரைவரோ இது முதல்வர் உம்மன் சாண்டி மனைவின் கார் என்று கூறியுள்ளார்.
ஆனால் சப்-இன்ஸ்பெக்டரோ அது யார் காராக இருந்தாலும் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து காரை எடுத்துச் சென்ற டிரைவர் இது குறித்து முதல்வர் உம்மன் சாண்டியிடம் கூறினார். கார் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததால் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இதையடுத்து டிரைவர் திருவனந்தபுரம் பட்டத்தில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சென்று ரூ.100 அபராதம் செலுத்தினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications