For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுக்கு அரசு வேலை- உ.பி. முதல்வர் அகிலேஷ்

Google Oneindia Tamil News

லக்னோ: டெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரக் கொடுமைக்குள்ளான பெண்ணின் சிகிச்சைச் செலவுகளை உ.பி.அரசே ஏற்கும் என்றும், அப்பெண்ணுக்கு அரசு வேலை தரப்படும் என்றும் உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் பெரும் கொடுமையானது, கடும் கண்டனத்துக்குரியது. தவறு செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக அனைவரும் நிற்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சிகிச்சைச் செலவுகள் முழுவதையும் உ.பி. அரசே ஏற்கும். மேலும் அப்பெண்ணுக்கு வேலையும் வழங்கப்படும். மேலும் அவருக்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதியும் வழங்கப்படும் என்றார் அகிலேஷ் யாதவ்.

English summary
Chief minister Akhilesh Yadav has announced that the Samajwadi Party (SP) government in Uttar Pradesh (UP) will bear all expenses of the treatment of the Delhi gang rape victim and her friend who was also brutally beaten up by the accused. He has also announced that the victims will also be given government jobs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X