For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதி கலவரத்தை தூண்டும் பேச்சு: டாக்டர் ராமதாசுக்கு மதுரை கலெக்டர் நோட்டீஸ்

By Mathi
Google Oneindia Tamil News

Ramadoss
மதுரை: தமிழகத்தில் சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததற்காக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மதுரையில் 51 சாதி சங்கங்களை திரட்டி அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையை சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் உருவாக்கியிருந்தார். இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், நாடக காதல் திருமணங்களால் பாதிக்கப்படும் பெற்றோர்களைப் பாதுகாக்கவும் அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுவதாகக் கூறினார். மேலும் இந்த அமைப்பின் சார்பில் ஜனவரி 24-ந் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ராமதாஸ் கூறியிருந்தார்.

ராமதாசின் இந்த பேட்டிக்காக ஏன் உங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டும் உங்கள் பேச்சு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரியும் ராமதாசுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

மேலும் அந்த நோட்டீசில் குற்றவியல் சட்டம் 144-வது பிரிவின் கீழ் இந்த பேச்சுக்காக மதுரை மாவட்டத்துக்குள் நீங்கள் நுழைய ஏன் தடை விதிக்கக் கூடாது என்றும் கேட்கப்பட்டிருக்கிறது.

English summary
Madurai District collector Anshul Mishra has issued a show cause notice to Pattali Makkal Katchi founder S Ramadoss asking why he should not be prohibited from entering the district under Section 144 CrPC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X