உ.பி,யில் 9 அமைச்சர்கள் மீது கற்பழிப்பு வழக்குகள்! 48 பேரில் 26 அமைச்சர்கள் கிரிமினல்கள்!!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம் என்று அறைகூவல் விட்டு முதல்வர் பொறுப்பேற்ற அகிலேஷ் யாதவ் தலைமையிலான அமைச்சரவையில் 54% பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களாம்!
இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் அதிகம் நடைபெறக்கூடிய ஒரு மாநிலமாக இருப்பது உத்தரப்பிரதேசம்தான்! உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் -ஒழுங்கு என்பது பொதுவாக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. சில தாதாக்கள் வசம்தான் இருக்கும். ஆனால் தற்போது அந்த தாதாக்களே அமைச்சர்களாகவும் வலம் வருவதால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும் என்பதை சொல்லத்தான் வேண்டியதில்லை.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தேர்தலின் போது தாக்கல் செய்தபோது ஆவணங்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டிருக்கிறது. இதில் உத்தரப்பிரதேசத்தின் 48 கேபினட் அமைச்சர்களில் 26 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

கற்பழிப்பு வழக்கில் 9 அமைச்சர்கள்!
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் நிறுவனர் திரிலோசன் சாஸ்திரி மற்றும் புதிய ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் சிங் ஆகியோர் தெரிவித்த தகவல்களின்படி உத்தரப்பிரதேசத்தின் 9 அமைச்சர்கள் மீது கற்பழிப்பு, கொலை, கொலை முயற்சி, கடத்தல் போன்ற பல வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.

அதிக 'கேஸ்' வாங்கிய அமைச்சர்
உ.பியின் அமைச்சர் மெகபூப் அலி மீது அதிகபட்சமாக 15 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இவர் அம்ரோ தொகுதி எம்.எல்.ஏ. கொலை முயற்சி, கொள்ளை, கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக இவர் மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

கிரிமினல் ராஜபையா
இதேபோல் உணவுத்துறை அமைச்சர் ரகுராஜ் பிரதாப் சிங் எற ராஜ பையா, நாடறிந்த குற்றவாளி. இவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முன்பு உ.பி.யில் முதல்வராக முலாயம்சிங் இருந்த காலத்தில் ராஜபையாவின் கொடி அப்படி ஒரு ரத்த வெள்ளத்தில் மிதந்தது! மற்றொரு அமைச்சர் அர்விந்த் சிங் மீது 3 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. மனோஜ்குமார் சிங் என்ற அமைச்சர் தம் மீது கற்பழிப்பு வழக்கு பதிவாகி இருக்கிறது என்று தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த ஆவணத்தில் தெரிவித்திருக்கிறார்.

குரோர்பதி அமைச்சர்கள்!
மேலும் 48 அமைச்சர்களில் 38 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. வேளாண் அமைச்சர் குவார் ஆனந்த் சிங்தான் இவர்களில் டாப் 1. இவரது சொத்து மதிப்பு மொத்தம் ரூ 18.3 கோடி! அடுத்த இடம் போக்குவரத்து அமைச்சர் ராஜா மகேந்திர அரித்மன்சிங்கின் சொத்து மதிப்பு ரூ14.79 கோடி! முதல்வர் அகிலேஷ் யாதவின் சொத்து மதிப்பு ரூ4.85 கோடி! அவரது உறவினரான சிவ்பால் சிங்கின் சொத்து மதிப்பு ரூ6 கோடி! உ.பி. அமைச்சர்களில் பல்ராம் யாதவ்-ன் சொத்து மதிப்பு வெறும் ரூ16.31 லட்சம்! இவர் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications