டெல்லி மாணவிக்கு தாமினி என்று பெயர் வைத்த போராட்டக்காரர்கள்
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ படிப்பு மாணவிக்கு போராட்டக்காரர்கள் தாமினி என்று பெயர் வைத்துள்ளனர்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் சீரழித்தது. மேலும் இதை தடுக்க வந்த அவரின் ஆண் நண்பரையும் அக்கும்பல் இரும்புக் கம்பியால் தாக்கியது. மாணவியும் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதில் அவரது குடல் வெளியே வந்தது. இதையடுத்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி்ககு நேற்று வரை 6 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் ஏராளமானோர் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தாமினி என்று பெயர் வைத்துள்ளனர். அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த அட்டைகளில் 'போராடு தாமினி, நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்' என்று எழுதி வைத்திருந்தனர். தாமினி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடல் நிலை தேறுவதும், மோசமடைவதுமாக உள்ளது.
தாமினி என்னும் இந்தி படம் கடந்த 1993ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க போராடும் கதாநாயகியின் பெயர் தான் தாமினி. அந்த பெயரைத் தான் டெல்லி மாணவிக்கு வைத்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
ஸ்தம்பித்த டெல்லி.. இனி இளைஞர்கள் பயப்படமாட்டார்கள்.. CJP பதிவால் மத்திய அரசு ஷாக்! -
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
CJP Protest LIVE: அடுத்தக்கட்ட போரட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி கட்சி! பாஜகவுக்கு நெருக்கடி -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக











Click it and Unblock the Notifications