சென்னையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 22 வயது வாலிபர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 22 வயது வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வடக்கு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த தம்பதி வாலிபர் ஒருவர் மீது போலீசில் புகார் கொடுத்தனர்.
அவர்கள் தங்கள் புகார் மனுவில், 22 வயதான மஜீத் என்பவர் எங்கள் 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications