பொங்கலுக்கு சிறப்பு பரிசு… ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் ரூ. 100 ரொக்கம்: ஜெ.
சென்னை: தமிழகத்தில் மழை பொய்த்ததாலும், வறட்சி நிலவுவதாலும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.100ரூபாய் ரொக்கமும் 60ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசும் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்காக அரிசி பெறும் சுமார் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 160 ரூபாய் மதிப்பிலான சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு ஒன்று அளிக்கப்படும்.
இந்த தொகுப்பில், 20 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ பச்சரிசி, 40 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக்காக இதர பொருட்கள் வாங்குவதற்காக 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கும்.
இந்த தொகுப்பு அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
இதனால், விவசாயிகளின் துயர் துடைக்க வழி வகுப்பதோடு, பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்"" என்று அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications