ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தொடரும் இலங்கை கடற்படை தாக்குதல் -12 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்து இலங்கை கடற்படை தாக்கியதில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து 664 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை திடீரென சுற்றி வளைத்தது. பின்னர் மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்து நாசம் செய்ததுடன் 4 மீனவர்களை கடலுக்குள் தள்ளிவிட்டு நீந்தி படகில் ஏறுமாறு கூறியுள்ளனர். மேலும் சிலரை படகிலேயே மண்டிபோட வைத்து கம்புகளால் அடித்துத் தாக்கியுள்ளனர். சிலர் மீது பாட்டில்களை வீசி காட்டுமிராண்டித்தனமாக இலங்கை கடற்படையினர் நடந்து கொண்டிருக்கின்றனர்.

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் 12 மீனவர்கள் கரை திரும்பி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+