26ல் கரூரில் தலித்துகள் செருப்பு அணிந்து செல்லும் போராட்டம்: சிபிஎம் அறிவிப்பு
கரூர்: குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி கரூர் அருகே உள்ள கொக்கம்பட்டியில் தலித்துகள் செருப்பு அணிந்து செல்லும் போராட்டம் நடைபெற உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம், அப்பிப்பாளையம் ஊராட்சியில் உள்ள கொக்கம்பட்டியில் கடந்த டிசம்பர் 25ம் தேதி செருப்பு அணிந்து சென்ற அருந்ததியர்கள் ஆதிக்க சக்தியினரால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி மனு அளித்துள்ளோம்.
மேலும் அந்தத் தாக்குதலை கண்டித்தும், அப்பகுதியில் நிலவும் தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்ட வலியறுத்தியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதி தமிழர் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, ஜனவரி 26ம் தேதியான குடியரசு நாளில் கொக்கம்பட்டியில் அனைத்து வீதிகளிலும் தலித் மக்களை ஒருங்கிணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. வரதராஜன் தலைமையில் செருப்பணிந்து செல்லும் போராட்டம் நடைபெறும்.
மேலும் கொக்கம்பட்டி பொது சீரணி அரங்கில் தலித்துகள் பங்கேற்கும் குடியரசு தினக் கலை நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் இன்னும் கூட செருப்பு அணிந்து செல்லக் கூட ஒரு போராட்டம் நடத்த வேண்டிய இழிவான நிலை நிலவுவது மனதை கலங்க வைக்கிறது.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications