திமுக கூட்டணிக்கு தயாராகும் தேமுதிக! அதிமுகவுக்கு போக பண்ருட்டி ராமச்சந்திரன் திட்டம்!!

லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது என்ற மனநிலையில் கட்சித் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி என்பது உறுதியான ஒன்று. இந்தக் கூட்டணியில் தேமுதிகவை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் காங்கிரஸும் திமுகவும் முனைப்பு காட்டுகின்றன. காங்கிரஸின் 'புது' மாப்பிள்ளையான ராகுல்காந்தியும் இதற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார்.
இந்த நிலையில் தேமுதிகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 25-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஹைலைட்டான டாபிக்கே 'கூட்டணி' யாருடன் என்பதுதானாம்! அதிமுகவை தோற்கடிக்க எந்தக் கூட்டணியோடும் சேரலாம் என்பதுதான் தேமுதிகவின் "தீர்மானிக்கும் சக்திகளான" பிரேமலதா மற்றும் சுதீஷின் கணக்கு. இதையேத்தான் அனைத்து மாவட்ட செயலாளர்களிடமும் சொல்லி இதே கருத்தை வலியுறுத்தி பொதுக்குழுவில் பேசுங்கள் என்று சொல்லி வருகின்றனர்.
ஆனால் இந்த உத்தரவுக்கு கட்டுப்படாத ஒருவரும் அக்கட்சியில் உண்டு! தேமுதிக அவைத்தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன்தான் அவர். திமுகவுடனான கூட்டணியையே விரும்பாத பண்ருட்டியார் தமது மகனுக்கு ஒரு எம்.பி.சீட் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் இருக்கிறாராம்..
பண்ருட்டியாரின் இந்த 'ஆவலை' மோப்பம் பிடித்து வைத்திருக்கிறது அதிமுக.. தேமுதிக, திமுக கூட்டணியில் ஐக்கியமாகும் நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் சொந்த பந்தம் என குடும்பத்தோடு அதிமுகவில் செட்டில் ஆகி மகனுக்கு ஒரு எம்.பி.சீட் வாங்கிவிடும் மனநிலையில் இருக்கிறாராம்!
ஆக களேபரம் காத்திருக்கு!
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
திமுக புறக்கணிப்பு! மம்தாவின் பெரும் தோல்விக்கு இடையே இன்று இந்தியா கூட்டணி கூட்டம்.. அஜெண்டா என்ன? -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்











Click it and Unblock the Notifications