சென்னையில் தனியார் கம்பெனி ஊழியரை கத்தியால் குத்தி ரூ. 25 லட்சம் வழிப்பறி
சென்னை: சென்னையில் தனியார் வர்த்தக நிறுவன ஊழியரை தாக்கி அவரிடம் இருந்து ரூ. 25 லட்சத்தை 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனம் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனங்களில் தினமும் வசூலாகும் பணத்தை அந்தந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் ஆன்லைனில் செலுத்தி வருகிறது. அந்த வர்த்தக நிறுவன ஊழியரான கமலக்கண்ணன் என்பவர் நேற்று மாலை பல்வேறு நிறுவனங்களில் வசூலிக்கப்பட்ட ரூ.25 லட்சம் ரொக்கத்துடன் திருமங்கலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து அவரை கத்தியால் குத்திவிட்டு பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடினர். இந்நிலையில் கொள்ளை கும்பலை அடையாளம் கண்டு கொண்ட போலீசார் மதுரவாயலைச் சேர்ந்த ராமச்சந்திரன், வினோத், கிஷோர், கோபி ஆகிய 4 பேரைக் நேற்று இரவு கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அருண், முத்து ஆகிய 2 பேரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ. 17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த கமலக்கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications