For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவூதியில் 'சட்டவிரோத'மாக மதுபான தொழிற்சாலை- இந்தியர் இருவருக்கு சிறை!

By Mathi
Google Oneindia Tamil News

ஜெட்டா: சவூதி அரேபியாவில் கள்ளத்தனமாக மதுபான தயாரிப்பு தொழிற்சாலையை நடத்தி வந்த இந்தியர் இருவருக்கு சிறை மற்றும் சவுக்கடி தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

மது, சூதாட்டம், விபச்சாரம் ஆகியவை சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால் தலைநகர் ஜெட்டா புறநகர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு ஒருவர் மது பாட்டிலை பெறும்போது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அங்கு சோதனை நடத்த்ப்பட்டதில் மதுபான தொழிற்சாலை ஒன்று அங்கு இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் தொழிற்சாலையை நடத்தியதாக இரு இந்தியர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஜெட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்ததுடன் சவுக்கடி தண்டனையும் கொடுக்கப்பட்டது. மேலும் சிறை தண்டனை முடிந்தவுடன் இருவரையும் சவூதி அரேபியாவை விட்டு நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

English summary
Two Indian nationals have been sentenced to one year in prison each and flogging for manufacturing and selling liquor in Saudi Arabia where alcohol is strictly prohibited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X