புதிய தலைமை செயலகம்: தமிழக அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக அரசு சட்டசபையை புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் இருந்து பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றியதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் அண்ணா சாலையில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் அந்த கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்தது. சட்டப்பேரவையும், புதிய தலைமைச் செயலகமும் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று தலைமைநீதிபதி கபீர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துமனையாக மாற்றிய தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+