For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் பிறநாடுகளின் தலையீட்டுக்கு எதிர்ப்பு: ராஜபக்சே மிரட்டல்!

By Mathi
Google Oneindia Tamil News

Mahinda Rajapaksa
திருகோணமலை: இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே மிரட்டல் விடுத்துள்ளார்.

இலங்கையின் 65-வது சுதந்திர நாள் விழா திருகோணமலையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு மகிந்த ராஜபக்ச பேசுகையில், இந்த திருகோணமலை துறைமுகத்தை உலக நாடுகள் கைப்பற்றத் துடிக்கின்றன. நாடு விடுதலை அடைந்த உடனேயே இங்கிலாந்து படையினர் திருகோணமலை துறைமுகத்தைவிட்டு வெளியேறவில்லை. சில ஆண்டுகள் கழித்தே வெளியேற்றப்பட்டன.

இலங்கை அரசுக்கு எதிராக அடிப்படை இல்லாத தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை இறைமையுள்ள நாடு. ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெற்றுள்ள நாடு. இப்படி இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஐ.நா. சபை அனுமதிக்காது. இந்த நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவது ஐ.நா. விதிகளுக்கு விரோதமானது என்றார் அவர்.

வரும் மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர உள்ள நிலையில் ராஜபக்சே மிரட்டல் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
President Mahinda Rajapaksa on Monday cried foul over attempts to set the U.N. system against Sri Lanka, saying the world body’s charter did not permit interference in the internal affairs of nations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X