For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பானில் சுனாமி தாக்கிய நகருக்கு வந்த 2 கிலோ தங்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Japan
டோக்கியோ: 2011-ம் ஆண்டு சுனாமி தாக்கிய ஜப்பானிய சிறு நகரம் ஒன்றுக்கு, யாரோ ஒருவர் 2 கிலோ தங்கப் பாளங்களை பார்சலில் அனுப்பி வைத்துள்ளார். இவற்றின் மதிப்பு இரண்டரை லட்சம் டாலர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது

கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11ம் நாளில் ஜப்பானில் சுனாமி தாக்கியதில் கடற்கரை பகுதியில் உள்ள இஷினோமாக்கி என்ற குட்டி நகரம் பலத்த அழிவை சந்தித்தது.

சுனாமி அடித்து 2-வது ஆண்டு நிறைவு நடைபெறும் சமயத்தில், இஷினோமாக்கி துறைமுகத்தை இயக்கும் நிறுவனத்தின் தலைவர் பெயருக்கு ஒரு மர்ம பார்சல் வந்தது.

நகானோ நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த தங்கப் பார்சலில் அனுப்பியவரின் பெயரோ, வேறு எந்த குறிப்புகளோ கிடையாது. தலா 1 கிலோ எடையுள்ள இரு தங்கப் பாளங்கள் பார்சலில் இருந்தன.

ஒரு தங்கப்பாளம் பிரவுன் பேப்பர் ஒன்றில் சுற்றப்பட்டும், மற்றையது ஜப்பானிய சஞ்சிகை ஒன்றில் இருந்து கிழிக்கப்பட்ட பேப்பரிலும் சுற்றப்பட்டிருந்தன.

நகரை சீரமைக்கவும், மக்களுக்கான நிவாரணத் தொகையாகவும் இது அனுப்பிவைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. "சுனாமியால் பாதிக்கப்பட்ட எங்கள் நகரத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறியுள்ள நகர நிர்வாக அதிகாரி, இந்த பணத்தை எதற்கு உபயோகிப்பது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை என்றார்.

English summary
A Japanese city devastated by the 2011 tsunami has received anonymous gifts of gold worth more than $250,000 in a phenomenon dubbed a “goodwill gold rush” ahead of the second anniversary of the disaster.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X