58 1/2 மணி நேர ‘தொடர் கிஸ்’: கின்னஸில் இடம் பிடித்த தாய்லாந்து தம்பதி
பாங்காங்: தொடர்ந்து 58 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகளுக்கு ஒருவரையொருவர் கட்டித்தழுவியபடி, தொடர்ந்து முத்தங்களை பரிமாறி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் ஒரு தம்பதியினர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் காதலர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நீண்டநேர தொடர் முத்தம் தந்து சாதனை படைக்கும் ‘கிஸ்ஸத்தான்' போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இரண்டரை நாட்களுக்கு தொடர்ந்து முத்தமிட்டு சாதனை படைத்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளனர் ஒரு தாய்லாந்து தம்பதியர்.

எக்கச்சக்க நிபந்தனை
சாதனையின் நிறைவு நேரம் வரை நின்றபடியே இருக்க வேண்டும். உணவு மற்றும் திரவ பானங்களை உறிஞ்சுகுழல் (ஸ்டிரா) மூலமாக தான் உட்கொள்ள வேண்டும். இயற்கை உபாதைகளை கழிக்கும் போதும் பொருத்திய உதடுகளை பிரிக்கக்கூடாது போன்ற பல நிபந்தனைகள் உண்டு.

திரணார்த் - லக்சனா
எதைப்பற்றியும் கவலைப்படாமல் எக்காச்சாய் திரணார்த் (44) என்பவர் தனது மனைவி லக்சனா (33)வுடன் இந்தப் போட்டியில் களமிறங்கினார்.

58 மணிநேரம் 35 நிமிடங்கள்
கின்னஸ் சாதனைகளை பதிவு செய்யும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகளுக்கு ஒருவரையொருவர் கட்டித்தழுவியபடி, தொடர்ந்து முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்.

முந்தைய சாதனை முறியடிப்பு
இந்த தம்பதியர், முந்தைய நீண்ட, நெடிய முத்த சாதனையை விட 8 மணி நேரம் அதிகமாக முத்தமிட்டு புதிய சாதனையை படைத்துள்ளனர்.

வைர மோதிரம் பரிசு
சுமார் 2 1/2 நாட்களாக நின்ற நிலையில் இந்த தொடர் முத்த சாதனையை படைத்த இவர்களுக்கு 2 வைர மோதிரங்களும், 3 ஆயிரத்து 300 அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்பட்டது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications