For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அம்மா மெஸ்'ஸில் அமோக கூட்டம்.. 2 மணி நேரத்தில் 2000 இட்லி காலி!

Google Oneindia Tamil News

சென்னை: அம்மா மெஸ் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மலிவி விலை உணவகங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இட்லிக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. 2 மணி நேரத்தில் 2000 இட்லியை சுட்டு விற்று விடுகிறார்களாம்.

முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில்தான் மலிவு விலை உணவகங்களை தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி சார்பி்ல இந்த உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 15 உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், தயிர்சாதம் மற்றும் சாம்பார் சாதம் தலா ரூ. 5க்கும் விற்கப்படுகிறது. இந்த உணவகங்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் குறிப்பாக ஏழைத் தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Chepaer rate food canteen

இந்த உணவகங்களை நிர்வகிக்கும் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் அதிகாலை 4 மணிக்கே வந்து விடுகிறார்கள். அவர்களின் கைவண்ணத்தில் படு சூடாக இட்லி தயாராகிறது. காலை 6 மணிக்குள் சுமார் 2 ஆயிரம் இட்லியை தயார் செய்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு இட்லியும் 100 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பது உத்தரவு. காலை 7 மணிக்கு கடை திறந்ததும் சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது. வரிசையில் காத்து நின்று டோக்கன் வாங்கி சாப்பிட்டு செல்கிறார்கள். 2 மணி நேரத்துக்குள் 2 ஆயிரம் இட்லியும் விற்று தீர்ந்து விடுகிறது. இதே நிலைதான் அனைத்து உணவகங்களிலும் நிலவுகிறது.

இட்லிக்குத்தான் நிறைய கிராக்கி இருப்பதால் கூடுதலாக இட்லி தயாரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதனால் இன்று முதல் இட்லி எண்ணிக்கை 2500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அலுவலகங்களுக்கு செல்பவர்களும் இந்த உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு செல்கிறார்கள். வெளியே சாப்பிட்டால் குறைந்தது 50 ரூபாய் செலவாகும். ஆனால் இங்கு 5 ரூபாயில் காலை டிபனை முடித்து விட முடிகிறது என்பதே பலரின் கூற்றாக உள்ளது.

இப்போது இட்லிக்கு சாம்பார் மட்டும் வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதலாக தேங்காய், மல்லி, புதினா இவற்றில் ஏதாவது ஒரு சட்னியும் தந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரது வேண்டுகோள். அதே போல் மதியம் சாம்பார் சாதத்துடன் அப்பளம், தயிர் சாதத்துடன் ஊறுகாயும் வழங்கினால் மதிய சாப்பாடும் அமர்க்களமாய் இருக்கும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.

தொடர்ந்து 200 வார்டுகளிலும் வார்டுக்கு 1 வீதம் 200 உணவகங்களை திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேவைக்கேற்ப தினமும் இட்லி, சாம்பார்சாதம், தயிர் சாதத்தை கூடுதலாக தயாரிக்க சொல்லி வருகிறோம். யாரும் உணவகத்துக்கு வந்துவிட்டு உணவு கிடைக்காமல் திரும்பி செல்லக்கூடாது என்ற எண்ணத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Chief Minister Jayalalitha's Chepaer rate food canteens have recieved thumps up from Chennai people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X