மார்ச் 5 கண்டன போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்: திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: டெசோ அமைப்பின் சார்பில் வரும் மார்ச் மாதம் 5ம் தேதி இலங்கை அரசை கண்டித்து சென்னை மற்றும் டெல்லியில் நடக்கவிருக்கும் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு திமுக தலைவர் கருணாநிதி அக்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட காட்சிகளை லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

ராஜபக்சே அரசு எந்த அளவுக்கு மன்னிக்க முடியாத போர்க்குற்றங்களைச் செய்திருக்கிறது என்பதற்கான பல சாட்சியங்கள் இந்த ஆவணப்படம் மூலம் வெளிவந்துள்ளது.

இலங்கையில் இன்னமும் மனிதாபிமானமற்ற கொடுமைகள் நடந்து வருகிறது என்பதற்கு சான்றாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பு என்ற அமைப்பின் 140 பக்க அறிக்கை அமைந்துள்ளது.

இந்த வேதனைகளை எல்லாம் இந்திய மக்களின் கவனத்துக்கு கொண்டு சென்று ராஜபக்சே ஒரு சர்வதேச போர்க்குற்றவாளி என்பதை உணரச் செய்ய வரும் மார்ச் 5ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் அறப்போராட்டமும், அதே நாளில் டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு ஜனநாயக வழியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த டெசோ அமைப்பு முடிவு செய்துள்ளது.

இந்தப் போராட்டங்களை திமுகவினர் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+