எங்கள் ஆளை விடுவிக்கலை என்றால் முகேஷ் அம்பானியை தாக்குவோம்: இந்தியன் முஜாஹிதீன் மிரட்டல் கடிதம்

கடந்த 24ம் தேதி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானியின் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர் அங்குள்ள ஊழியரிடம் ஒரு கவரை அளித்துவிட்டு சென்றார். அதைப் பிரித்து படித்துப் பார்த்தபோது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுத்துள்ளது தெரிய வந்தது.
முகேஷ் குஜராத் முதல்வர் மோடியை ஆதரிப்பது மற்றும் குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவரை தாக்கப் போவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது 27 அடுக்குமாடி வீடான ஆன்டில்லாவையும் தாக்கப் போவதாக மிரட்டியுள்ளனர். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தன் கையால் எழுதி அனுப்பிய கடிதத்தில் தங்கள் கூட்டாளியான டேனிஷ் என்பவரை விடுதலை செய்யாவிட்டால் முகேஷ் அம்பானிக்கு தான் கேடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடித விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டேனிஷ் பீகார் மாநிலம் தர்பங்காவைச் சேர்ந்த முகமது டேனிஷ் அன்சாரி ஆகும். பட்கலின் சகோதரர்கள் பாகிஸ்தான் தப்பிச் செல்லும் முன்பு தனது வீட்டில் அடைக்களம் கொடுத்ததற்காக டேனிஷ் கைது செய்யப்பட்டார்.
இந்த கடிதம் கிடைத்தவுடன் ரிலையன்ஸ் மூத்த அதிகாரி ஒருவர் மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங்கை சந்தித்து தகவல் தெரிவித்துள்ளார். கடிதம் கொண்டு வந்தவரை கண்டுபிடிக்க ரிலையன்ஸ் அலுவலக சிசிடிவி பதிவை கேட்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications