ஹியூகோ சாவேஸ் உடலுக்கு 20 லட்சம் மக்கள் அஞ்சலி… பதப்படுத்தப்பட்ட உடல் காட்சிக்கு வைப்பு

வெனிசுலாவின் அதிபராக இருந்த ஹியூகோ சாவேஸ் கடந்த செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தார். அவருடைய உடல் தலைநகர் கராகாஸிலுள்ள ராணுவ அகாடமிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த ஊர்வலம் சென்ற வழிநெடுக பொதுமக்கள் திரண்டு கண்ணீர்அஞ்சலி செலுத்தினர்.
ராணுவ அகாடமியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு நீண்ட வரிசையில் மக்கள் நின்றதால் 10 மணி நேரம் வரையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியதாக அதிகாரிகள் கூறினர். அர்ஜென்டினா ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ், உருகுவே ஜனாதிபதி ஜோஸ் முஜிகா மற்றும் சில நாட்டு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
சாவேஸின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கியூபா ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ, ஈரான் ஜனாதிபதி முகமது அகமதினிஜாத், ஈகுவேட்டார் ஜனாதிபதி ரபேல் கோர்ரியா உள்பட 30 க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்க பிரதிநிதிகளாக ஜார்ஜ் மேக்ஸ், வில்லியம் டெலாஹன்ட் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு பிறகு உடல் அடக்கம் செய்யப்படாமல் அதை வாசனை திரவியம் மற்றும் மூலிகைகள் பூசி பதப்படுத்தி ராணுவ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அங்கு மேலும் 7 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
இதை வெனிசுலாவின் துணை அதிபரும், புதியஅதிபராகவுள்ளவருமான நிகோலஸ் மதுரோ அறிவித்தார்.
ரஷிய தலைவர் லெனின், சீன தலைவர் மாவோ ஷிடாங் ஆகியோர் உடல்கள் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதுபோல சாவேஸ் உடல் ராணுவ அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications