For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20ம் தேதி உலக தலைக் காய விழிப்புணர்வு தினம் .. கோவையில் பேரணி

Google Oneindia Tamil News

கோவை: உலக தலைக்காய தினத்தையொட்டி வருகிற 20ம் தேதி கோவையில் விழிப்புணர்வுப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மார்ச் 20ம் தேதியை உலக தலைக்காய விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கிறார்கள். தலைக்காயத்தால் ஏற்படும் பிரச்சினைகள், பாதிப்புகள், அதைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வூட்டும் நாளாக இது அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் உலகம் முழுவதும் 5 சதவீதம் பேர் தலைக்காயத்தாலும், விபத்துக்களில் சிக்கிமூளையில் ஏற்படும் காயத்தாலும் கடுமையான பாதிப்பு மற்றும் மரணத்தை சந்திக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

ஹெல்மட் அணிவதன் மூலம் பெருமளவில் தலைக்காயத்தைத் தவிர்க்க முடியும் என்பதை பலரும் உணர்வதில்லை. இதுபோன்றவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வூட்டுவதற்காகவே இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாட்டை இந்திய மருத்துவர் சங்கத்தின் கோவை கிளை ஏற்பாடு செய்துள்ளது என்று அதன் தலைவர் டாக்டர் ஏ.கே. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இந்தப் பேரணியில் பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், டாக்டர்கள் என சகலரும் கலந்து கொள்கின்றனர்.

English summary
A rally has been arranged on the eve of world head injury awarness day on March 20 at Coimabtore by IMA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X