For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியை எரித்த இளைஞர் காங்கிரஸார்

Google Oneindia Tamil News

Congress party workers burn an effigy of DMK Chief M Karunanidhi after he announced the withdrawal of support to the UPA Government
சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகியதை அடுத்து திமுக தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியை இளைஞர் காங்கிரஸார் எரித்தனர்.

காங்கிரஸ்-திமுக கூட்டணியில் பல முறை கருத்து வேறுபாடு ஏற்பட்டபோதிலும் கூட்டணியில் இருந்து திமுக விலகாமலேயே நீடித்து வந்தது. இந்த நிலையில் இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ்-திமுக இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் விலகுவதாக நேற்று திமுக தலைவர் கருணாநிதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் வாயிலில் திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால், இளைஞர் காங்கிரஸார் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர். பின்பு, ராஜபக்சேவின் உருவபொம்மையையும் எரித்தனர்.

இந்த சம்பவங்கனால் சத்தியமூர்த்தி பவனுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

English summary
Youth congressmen burnt the effigy of DMK supremo Karunanidhi at the gate of the Sathyamurthy Bhavan in Chennai after DMK cadres created ruckus there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X