வெண்ணிற ஆடை மூர்த்திக்கு நடந்தது ஒபாமாவுக்கும் நடந்திருக்கே!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் லிமோசின் காரில் யாரோ டீசலுக்கு பதில் பெட்ரோல் நிரப்பியதால் அது அவரது இஸ்ரேல் பயணத்தின்போது பழுதானது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இஸ்ரேலின் டெல் அவிவிற்கு தனது லிமோசின் காரில் சென்றார். ஆனால் யாரோ அந்த காரில் டீசலுக்கு பதில் பெட்ரோலை நிரப்பியுள்ளனர். இதனால் கார் பாதி வழியிலேயே பழுதாகி நின்றுவிட்டது. இதையடுத்து ஜோர்டானில் இருந்து வேறு ஒரு கார் கொண்டு வரப்பட்டு அதில் அவர் டெல் அவிவ் சென்றார்.

இந்த சம்பவம் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதிபர் காருக்கே பாத்து ஊத்த மாட்டாங்களா?

அதிபர் காருக்கே பாத்து ஊத்த மாட்டாங்களா?

உலகின் சக்தி வாய்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்காவின் அதிபர் காருக்கே டீசல் ஊற்றுகிறோமா, பெட்ரோல் ஊற்றுகிறோமா என்று கூட பார்க்காமல் இருந்துள்ளனர்.

டிரக்கில் போன ஒபாமா கார்

டிரக்கில் போன ஒபாமா கார்

பழுதான ஒபாமாவின் குண்டு துளைக்காத லிமோசின் ஒரு டிரக்கில் ஏற்றி பழுதுபார்க்க எடுத்துச் செல்லப்பட்டது.

ரிப்பேராகலாம், அதனால் தான் பல வாகனங்கள்

ரிப்பேராகலாம், அதனால் தான் பல வாகனங்கள்

ஒபாமாவின் வாகனம் பழுதானதை அவரது சீக்ரட் சர்வீஸ் செய்தித் தொடர்பாளர் எட்வின் டானவன் உறுதி செய்தார். அதிபரின் பயணங்களில் வாகனங்கள் பழுதாகலாம் என்பதால் தான் பல வாகனங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன என்றார்.

வெண்ணிற ஆடை மூர்த்தி காரில் பெட்ரோலுக்குப் பதில் டீசல்

வெண்ணிற ஆடை மூர்த்தி காரில் பெட்ரோலுக்குப் பதில் டீசல்

கடந்த ஆண்டு புதுச்சேரிக்கு சென்ற நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பெட்ரோல் போடுவதற்காக பங்குக்கு காருடன் சென்றபோது பெரும் சோதனையை சந்திக்க நேர்ந்தது. அதாவது பெட்ரோலுக்குப் பதில் பங்க் ஊழியர் டீசலை நிரப்பிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+