பாலியல் புகாரில் சஸ்பெண்டான வாத்தியாரை மீண்டும் அதே பள்ளியில் நியமிப்பதா?: மக்கள் தர்ணா
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: தேவகோட்டையில் பாலியல் புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர் மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தப்பட்டதை எதிர்த்து பொது மக்கள் தர்ணா நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அனுமந்தக்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில் 2 பேர் பாலியல் புகாரில் சிக்கினர். இதையடுத்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் சீனிராஜன் என்ற வேளாண் துறை ஆசிரியர் ஒரு மாதத்திற்குள் மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
பாலியல் புகாரில் சிக்கியவரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தியதை அறிந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சீனிராஜனை வேறு பள்ளிக்கு மாற்றக் கோரி பள்ளிக்கூட வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications