கண்ட இடங்களில் தொட்டார், காதுக்குள் செக்ஸியாக பேசினார்.. பிரபல யோகா குரு மீது புகார்
லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவில் வசித்து வரும் பிரபலமான யோகாசன குருவான பிக்ரம் செளத்ரி மீது 29 வயதான பெண் பரபரப்பு செக்ஸ் புகார்களை சுமத்தியுள்ளார்.
பிக்ரம் செளத்ரியின் வயது 67 ஆகிறது. அவர் மீது புகார் கொடுத்துள்ள பெண் சாரா பகான் தனது புகாரில், தன்னை கண்ட இடங்களில் தொட்டார். காதுக்கு நெருக்கமாக வந்து செக்ஸியான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். தொடர்ந்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். எனது யோகா வாழ்க்கையை கெடுத்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான யோகாகுரு இந்த பிக்ரம் செளத்ரி. பல்வேறு ஹாலிவுட் பிரபலங்களும் இவரின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த நிலையில் இவர் மீது செக்ஸ் டார்ச்சர் புகார் கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விதம் விதமான யோகாசனத்தை அமெரிக்கர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் பிக்ரம் செளத்ரி. அதில் முக்கியமானது கடும் வெப்பத்தின் கீழ் யோகா செய்வது. அதாவது 104டிகிரி பாரன்ஹீட் சூட்டுக்குக் கீழ் யோகாசனம் செய்வது. இதற்கு ஹாட் யோகா என்று இவர் பெயர் வைத்திருந்தார். இது அமெரிக்காவில் படு வேகமாக பிரபலமானதாகும்.
இந்த நிலையில் தற்போது பிக்ரம் மீது லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட்டில் சாரா வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், அடிக்கடி எனது உடலைத் தொடுவார் பிக்ரம் செளத்ரி. எனது காதுகளுக்கு நெருக்கமாக வந்து செக்ஸியாக பேசுவார். எனது உடல் அமைப்பு குறித்து செக்ஸியான கருத்து தெரிவிப்பார்.
தனது மனைவி ராஜஸ்ரீ குறித்து அசிங்கமாக பேசுவார். அவரை விபச்சாரி என்று என்னிடம் கூறுவார். தன்னை தனது மனைவியிடமிருந்து நான்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்வார் என்று கூறியுள்ளார் சாரா.
சாரா கல்லூரி மாணவியாக இருந்தபோது பிக்ரமின் யோகா வகுப்புகளுக்கு வர ஆரம்பித்தாராம்.
பிக்ரம் செளத்ரி 1973ம் ஆண்டு அப்போதைய அதிபர் நிக்சனின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். நிக்ஸனுக்கு இருந்த உடல் உபாதை ஒன்றை அவர் சரி செய்தார். இதையடுத்து அவர் அப்படியே அமெரிக்காவில் செட்டிலானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மடோனா, பிப்பா மிடில்டன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இவரது வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications