75% சிங்களவர்கள் வட இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள்- இலங்கை தூதர் விஷமப் பிரச்சாரம்
டெல்லி: இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்களவர்கள் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம் ரகசிய பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 21ம் தேதி இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக டெல்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸம் இலங்கைக்கு சாதகமான ஆதரவை இந்திய ஊடகங்கள் மூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.

வட இந்தியா பூர்வீகம்
`சிங்களர்கள் வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள்' என குறிப்பிட்டு அனுப்பிய இ-மெயில் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இ-மெயில் தகவலில் 12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு இ.மெயில்
பிரசாத் கரியவாஸத்தின் இ-மெயில் முகவரியில் இருந்து இலங்கையை தலைமையிடமாக கொண்ட தனியார் ஊடக மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு கடந்த 19-ந்தேதி இந்த இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மூலம் இந்த இ-மெயில் டெல்லியில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பிரசாத் கரியவாஸம் ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸத்தின் விஷம பிரசார இ-மெயில் டெல்லியில் உள்ள ஊடகங்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

விஷமப்பிரச்சாரம்
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் தீவிர போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் பிரசாத் கரியவாஸத்தின் விஷம பிரசாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்நாட்டு அரசியல் நடவடிக்கையில் பிரச்சினை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. அதையும் மீறி இலங்கை தூதர் பிரசாத்கரிய வாஸம் ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அரசியலுடன் விளையாட்டை கலப்பதா?
இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட தடை விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரசாத் கரியவாஸம், அரசியலுடன் விளையாட்டை கலப்பது ஏற்புடையதல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications