ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்...
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்...
திமுக செயற்குழுவில் பேசிய திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன், மத்தியில் ஆட்சியை கவிழ்க்க திமுக துணை போகாது என்று பேசியிருக்கிறார். இதை கருணாநிதி கேட்டுக் கொண்டு வாய்மூடி மவுனியாகத்தான் இருந்தார்.
இந்த விஷயங்களில் எல்லாம் கருணாநிதி மவுனம் சாதிப்பதைப் பார்த்தால், மத்திய அரசுடனான தொடர்பை எவ்விதத்திலும் துண்டிக்க கருணாநிதிக்கு விருப்பமில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மறைமுக உறவை தொடர்ந்து கொண்டு தியாகம் செய்து விட்டது போல் வெளி வேடம் காட்டி தமிழக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். இதைவிட தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.
இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான கொடூர நடவடிக்கைகளினால், தமிழ்நாட்டில் வாழும் மக்கள் இயற்கையாகவே வெறுப்பும், கோபமும் அடைந்துள்ள சூழ்நிலையில், இலங்கை நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படக்கூடாது என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன்.
தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகளை அனுமதிக்க வேண்டாம் என்று ஐ.பி.எல். அமைப்பாளர்களை வற்புறுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளேன். இலங்கை நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை ஐ.பி.எல். அமைப்பாளர்கள் அளித்தால் மட்டுமே ஐ.பி.எல். விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற தமிழக அரசு அனுமதிக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தேன்.
எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி....
எனது வேண்டுகோளினை பரிசீலித்த ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழு, சென்னையில் நடைபெற இருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று முடிவெடுத்து, இது குறித்த ஆலோசனையை அணிகளின் உரிமையாளர்களுக்கு தெரிவிப்பதென தீர்மானித்துள்ளது. இது, இலங்கைத் தமிழர்களின் பால் எனது தலைமையிலான அரசு கொண்டுள்ள உணர்வுப்பூர்வமான ஈடுபாட்டிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
இருப்பினும், இந்த ஐ.பி.எல். போட்டிகளில், பங்கேற்க உள்ள அணிகளில், கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் குழுமத்தின் 'சன் ரைசர்ஸ்' கிரிக்கெட் அணியும் ஒன்று என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த அணியின் தலைவரே இலங்கை நாட்டைச் சேர்ந்த குமார் சங்ககாரா. இவரைத்தான் அணியின் தலைவராகவே கருணாநிதியின் பேரனுக்குச் சொந்தமான சன் குழுமம் தேர்ந்தெடுத்துள்ளது.
இலங்கை நாட்டைச் சேர்ந்த திசாரா பெரேரா என்ற மற்றொரு வீரரும் இந்த அணியில் இடம் பெற்றிருக்கிறார். இதை எப்படி கருணாநிதி அனுமதிக்கிறார்?.
ஒரு பக்கம் இலங்கைத் தமிழர்களுக்காக உருகுவது போல் தோற்றத்தை உருவாக்குவது; மறுபக்கம் தமிழர்களை அழித்த இலங்கை அரசுக்கு உறுதுணையாக இருந்த மத்திய காங்கிரஸ் அரசுடனும் உறவைத் தொடர்வது! டெசோ அமைப்பிற்கு புத்துயிரூட்டியுள்ள கருணாநிதி, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று கூறும் கருணாநிதி, தன் குடும்ப கிரிக்கெட் அணியில் இலங்கை வீரர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து வாய் திறக்காமல் இருப்பது சுயநலத்தின் உச்சகட்டம்.
ஏன் இந்த இரட்டை வேடம்? ஏன் இந்த இரட்டை முகம்?....
ஏன் இந்த இரட்டை வேடம்? ஏன் இந்த இரட்டை முகம்?. கருணாநிதியின் இந்த இரட்டை வேடத்தை மக்கள் நன்கு புரிந்துதான் வைத்துள்ளார்கள். என்னைப் பொறுத்த வரையில், இந்த அரசைப் பொறுத்தவரையில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்போரை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்திருக்கிறோம். இந்திய அரசு இலங்கைத் தமிழர்களை அழிக்க ஆயுதங்களை அளித்ததிலிருந்து, பயிற்சிகளை அளித்ததிலிருந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறோம்.
நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தேன். ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகக்கூடிய நிலையிலும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது மட்டுமல்லாமல், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதைத் தடுத்து நிறுத்தினேன். இந்தியாவில் எங்கும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று பிரதமரை வலியுறுத்தினேன்.
இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டேன். இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து, அந்தப் போட்டியை நடத்துவதையே தமிழகம் கைவிட்டுவிட்டது. மேலும், இலங்கையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
சென்ற ஆண்டு, இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினேன். அமெரிக்கா கொண்டு வந்த ஓரளவு வலுவான தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்து, அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக மத்திய காங்கிரஸ் அரசு வாக்களித்தது. இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்தபோது, அதற்கு வலுவூட்டும் விதமாக இந்தியா என்னென்ன திருத்தங்களை அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.












Click it and Unblock the Notifications