7-வது நாளை எட்டியுள்ள அரவிந்த் கேஜரிவால் உண்ணாவிரதம்

உடல்நிலை மோசமானாலும், "எனது போராட்டத்துக்கான நோக்கம் நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிடமாட்டேன்" என்று தில்லியில் குடிநீர் மற்றும் மின் கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் உண்ணாவிரதம் இருந்துவரும் ஆம்ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார். அவரது உண்ணாவிரதம் நாளை, எட்டாவது நாளை எட்டுகிறது.
இது குறித்து, தொண்டர்களிடையே வியாழக்கிழமை அவர் பேசியதாவது, ‘சட்ட விரோதமாக உயர்த்தப்பட்டுள்ள குடிநீர், மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டாம் என்ற செய்தி சமூகத்தின் அனைத்து பகுதி மக்களையும் சென்றடைய வேண்டும். கட்டண உயர்வு காரணமாக தில்லியில் உள்ள குடிசை, கிராமம், மறுகுடியமர்த்தப்பட்ட காலனி, அங்கீகாரமற்ற காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சாமானிய மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
தங்கள் வருமானத்தையும் விட அதிகமாக குடிநீர், மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகின்றனர். அத்தகைய சாமான்ய மக்களிடம் போராட்ட உணர்வை கொண்டுச் சேர்க்க வேண்டும். அதுவரை உண்ணாவிரதத்தை கைவிடமாட்டேன்' என்று கேஜரிவால் கூறினார்.
உண்ணாவிரதம் 7-வது நாளை எட்டியுள்ள நிலையில், அவரது உடல் நிலை பலவீனம் அடைந்துள்ளது. அவரது எடையில் 6 கிலோ குறைந்துள்ளது என்று அவரைப் பரிசோதிக்கும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
"குடிநீர், மின் கட்டண உயர்வுக்கு எதிரான மனுவில் 2.69 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். அந்த மனு விரைவில், முதல்வர் ஷீலா தீட்சித்திடம் அளிக்கப்படும்' என்று ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா கூறினார்.
கடந்த 23-ம் தேதி, கிழக்கு தில்லி சுந்தர் நகரி பகுதியில் கேஜரிவால் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அவரது கட்சியினர், தில்லியில் 64 இடங்களில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அனைத்து வார்டுகளிலும் துண்டுப் பிரசுரம் விநியோகித்தும் அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications