தனிமைப்படுத்தப்படும் அபாயத்தால் கடற்படை வீரர்களை ஒப்படைத்தோம்- இத்தாலி பிரதமர் விளக்கம்

கேரள கடல் பகுதியில் 2 மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் 2 இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இத்தாலி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக 4 வார காலம் இத்தாலிக்கு சென்றுவர அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.
ஆனால் அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இத்தாலி அரசு மறுத்தது. பின்னர், சுப்ரீம் கோர்ட் எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு பணிந்து திருப்பி அனுப்பியது. இதனால் அதிருப்தி அடைந்த இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் கியுலியோ தெர்சி பதவி விலகினார்.
இந்நிலையில், இத்தாலி வீரர்களை திருப்பி அனுப்பியது குறித்து இத்தாலி பிரதமர் மரியோ மொன்டி அந்நாட்டு பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ‘இத்தாலி கடற்படை வீரர்களை திருப்பி அனுப்ப மறுத்தபோது, சர்வதேச அளவில் இத்தாலி தனிமைப்படுத்தப்படும் அபாயம் இருந்தது. இந்தியாவுடன் கடுமையான மோதல் வெடிக்கும் சூழ்நிலை நிலவியது. இந்தியாவும், 'பிரிக்ஸ்' அமைப்பின் சக உறுப்பு நாடுகளும் இத்தாலி மீது நடவடிக்கை எடுக்கதிட்டமிட்டன.
வளரும் நாடுகளில் உள்ள முக்கிய வர்த்தக கூட்டாளிகளுடனான உறவு சீரழியும் அபாயம் ஏற்பட்டது. அதனால்தான், 2 வீரர்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை அனுப்பியதன் மூலம் இந்தியாவுக்கும், இத்தாலிக்கும் இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. இது, பிரச்சினை விரைவாக தீர்வதற்கு வழிவகுக்கும்.
அதே சமயத்தில், பொருளாதார நலன்தான் இம்முடிவை எடுக்க முக்கிய காரணியாக இருந்தது என்பது தவறு. மேலும், இப்பிரச்சினையில் இந்தியாவுடன் எவ்வித ரகசிய பேரமும் நடக்கவில்லை.
வெளியுறவுத்துறை மந்திரி கியுலியோ தெர்சி பதவி விலகப்போவதாக முன்கூட்டியே சொல்லவில்லை. அவர் விலகியதற்கு இத்தாலி வீரர்களை திருப்பி அனுப்பியது மட்டும் காரணம் அல்ல. அவர் வேறு உள்நோக்கத்துடன் பதவி விலகி உள்ளார். அந்த காரணம் விரைவில் தெரிய வரும்' என அவர் கூறினார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications