For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'எவம்ல என் பாட்டை வேணாங்குறது'.. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஜப்பான் தாத்தா!

Google Oneindia Tamil News

Japan talent show reject, 70, rings in bomb threat
டோக்கியோ: தனித்திறன் போட்டியில் பாட்டுப்பாட அனுமதி மறுத்ததால், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவர் எச்சரித்து விடுவிக்கப்பட்டார்.

ஜப்பான் நாட்டு டி.வி. நிறுவனம் ஒன்று இனிமையாக பாட்டுப் பாடும் தனித்திறன் போட்டியை ஒளிபரப்புகிறது. இதில் பங்கேற்க காசூமி யாசிலே (70) என்ற முதியவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால் இவருடைய விண்ணப்பத்தை நிகழ்ச்சி தயாரிப்பாளர் நிராகரித்து விட்டார்.

இதனால் கோபம் அடைந்த முதியவர் தனது செல்போனில் பேசி, நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டியுள்ளார். உடனே போலீசார் செல்போன் அழைப்பை வைத்து அவரை மடக்கி பிடித்தார்கள். தன்னுடைய திறனை வெளிப்படுத்த வாய்ப்பு தர மறுத்ததால் இவ்வாறு நடந்து கொண்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, குழப்பம் நீங்கியது.

காசூமி ‘வயது முதிர்ந்தவர்' என்பதால் அவர் மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், போலீசார் எச்சரித்து விடுவித்தனர்.

English summary
A 70-year-old Japanese man was so enraged at being rejected by a TV talent show that he allegedly threatened to blow up the programme's broadcaster, police said on Friday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X