மதுரை போலீஸை வெயிலிலிருந்து காக்க 'ஜில்' தொப்பிகள்.. 5 வேளை கூல்டிரிங்ஸுக்கும் ஏற்பாடு!
மதுரை: மதுரையில்வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்து விட்டது. மக்கள் தலையா இல்லை அடுப்பா என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர். அப்படி ஒரு வெயில். இந்த நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்காக மதுரை காவல்துறை சிறப்புதொப்பிகளை காவலர்களுக்குக் கொடுத்துள்ளது.
கோடை காலம் பிறந்து விட்டது. கொளுத்தும் வெயிலும் கிளம்பி விட்டது. எங்கு பார்த்தாலும் வெள்ளை வெயில். கண் கூசுகிறது, கால் சுடுகிறது.
மதுரையில் இப்போதே 100 டிகிரியைத் தாண்டி விட்டது வெயில். இதனால் மக்கள் வெயிலில் புழுங்க ஆரம்பித்து விட்டனர். கரண்ட் வேறு கிடையாதே. இதனால் டபுள் அட்டாக்காக மாறி மக்கள் டென்ஷனுடன் திரிகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது போலீஸாருக்காக சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

வெயிலில் சுருளும் மதுரை போலீஸ்
மதுரையில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி அடிக்க ஆரம்பித்துள்ளால் போக்குவரத்து போலீஸார் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஸ்பெஷல் ஏற்பாடுகள்
மதுரையில் பணிபுரியும் போக்குவரத்து போலீசார் மற்றும் ரோந்து போலீசார் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க மதுரை மாநகர போலீஸ் விசேஷ ஏற்பாடுகளை செய்து உள்ளது.

5 வேளை குளிர்பானம்
நகரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு தினமும் 5 வேளை குளிர்பானம் அளிக்கப்படுகிறது. அதாவது தினமும் காலை 11, பகல் 1, மாலை 3, 5 உள்பட 5 நேரங்களில் குளிர்பானம் தரப்படுகிறது.

சிறப்பு தொப்பிகளும்
அதேபோல் போக்குவரத்து போலீசார் வெயிலில் நின்று பணிபுரிவதால் அவர்களுக்கு வெப்பம் தாக்குவதை தடுக்கும் வகையில் சிறப்பு தொப்பிகள் வழங்கப்பட்டுள்ளது.

45 இடங்களில் துணிக் குடைகள்
இதுபோக மாநகரில் 45 இடங்களில் துணி குடைகள் போலீஸாருக்காக வைக்கப்பட்டுள்ளது.

18 இடங்களில் ஏசி கூண்டு
மேலும் நகரின் 18 இடங்களில் ஏற்கனவே குளிர்சான கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு குளிர்பானம், தொப்பி வழங்கும் பணிகளை போக்குவரத்து துணை கமிஷனர் பெரோஸ்கான் நேரடியா கண்காணித்து வருகிறார்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications