108 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கினார் ஜனாதிபதி: விருதை புறக்கணித்தார் ஜானகி!
டெல்லி: நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகளை இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழக்கினார். முன்பே கூறியதுபோல் விழாவைப் புறக்கணித்தார் பாடகி ஜானகி.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.

4 பத்ம பூஷன் விருது:
அறிவியல் விஞ்ஞானிகள் பேராசிரியர் யஷ்பால் ரோத்தம், நரசிம்மா உள்பட 4 பேர் பத்ம பூஷன் விருதுக்கென தேர்வு செய்யப்பட்டார்கள்.

24 பத்மவிபூஷன் விருது:
தயாரிப்பாளர் டி.ராமநாயுடு, பாடகி எஸ்.ஜானகி, நடிகை சர்மிளா தாகூர், மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணா, மறைந்த பாடகர் ஜஸ்பால்சிங் பட்டி, தமிழகத்தை சேர்ந்த ராமமூர்த்தி தியாகராஜன், கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் உள்பட 24 பேர் பத்மவிபூஷன் விருதுக்கும் அறிவிக்கப்பட்டனர்.

80 பத்மஸ்ரீ விருது:
தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி, லட்சமி நாராயணா சத்யராஜூ, எஸ்.கே.எம்.மலியானந்தன், தொழில் அதிபர் ராஜ்ஸ்ரீபதி, பேராசிரியர் டாக்டர் டி.வி.தேவராஜன் உள்ளிட்ட 80 பேருக்கு அவரவர் சார்ந்த துறைகளுக்கான பத்மஸ்ரீ விருதுக்கும் அறிவிக்கப்பட்டனர்.

விருது வழங்கும் விழா:
விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகைளில் இன்று நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணா, ஜஸ்பால்பட்டி சார்பில் அவரது குடும்பத்தி னர் விருதுகளை பெற்றுக் கொண்டனர். நடிகை ஸ்ரீதேவி, டிராவிட் உள்ளிட்டோர் நேரில் வந்து ஜனாதி பதியிடம் விருதை பெற்றுக் கொண்டனர்.

எம்.எஸ். ஜானகி புறக்கணித்தார்:
தனக்கு உரிய நேரத்தில் வழங்காமல் தாமதமாக பத்மவிபூஷன் விருது வழங்குவதால் அதை புறக் கணிப்பதாக ஜானகி ஏற்கனவேஅறிவித்து இருந்தார். அதன்படி இன்று அவர் விருது வழங்கும் விழாவை புறக்கணித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications