போர் பதற்றம்: வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை! தூதரகங்களுக்குகெடு!!

கொரிய தீபகற்ப பகுதியில் தென்கொரியா-அமெரிக்கா கூட்டாக இணைந்து நிற்கிறது. வடகொரியாவோ அணு ஆயுதங்களுடன் அமெரிக்காவை நிர்மூலமாக்குவோம் என்று மிரட்டி வருகிறது. தென்கொரியாவுடன் போர் தொடங்கிவிட்டதாகவே அறிவித்து இருநாடுகளின் கூட்டு தொழிற்சாலையை இழுத்து மூடியிருக்கிறது வடகொரியா. போருக்கான இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அந்நாடு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் ஏப்ரல் 10-ந் தேதிக்குப் பிறகு வெளிநாட்டு தூதரகங்களுக்கு தங்களால் எந்த பாதுகாப்பும் அளிக்க முடியாது என்று வடகொரியா அறிவித்தது. இது தொடர்பாக வெளிநாட்டு தூதர்கள் கூட்டத்தை நேற்று கூட்டிய வடகொரியா பாதுகாப்பாக வெளியேற தற்போது உதவுகிறோம் என்றும் கூறியிருக்கிறது.
ஆனால் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம், வடகொரியா நிலைமைகள் தொடர்பாக சர்வதேச கூட்டு நாடுகளுடன் ஆலோசித்து வருகிறோம். வடகொரியாவில் இருந்து தூதரகத்தை உடனே விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்படவில்லை என்றார்.
ஸ்வீடன் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள், தூதரகத்தை காலி செய்யுமாறு வடகொரியா கூறவில்லை. ஆனால் வெளியேறுவதற்காக பாதுகாப்பு உதவிகளை செய்வதாக வடகொரியா தெரிவித்துள்ளது என்றார். பிரான்ஸ் வெளியுறவுத் துறைஅமைச்சகமும், வடகொரியா நிலைமை மிகவும் கவலையளிக்கிறது என்று கூறியுள்ளது,
மேலும் வட கொரியா தாக்குதல் நடத்த 2 ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறது. இவை 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் முதல் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கக் கூடியும் என்று கூறப்படுகிறது. அதாவது தென் கொரியா மற்றும் ஜப்பானின் எந்த இலக்கையும் தாக்க முடியும்.. மேலும் பசுபிக் தீவுகளில் ஒன்றான அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவையும் வடகொரியாவினால் தாக்க முடியும். குவாம் தீவுதான் வடகொரியாவின் முதல் இலக்காக இருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச விதிகளை மீறி அணு ஆயுத நடவடிக்கையில் ஈடுபடுவதில் இருந்து வடகொரியா விலகி இருக்க வேண்டும். இதை மீறி எந்த ஒரு ஏவுகணை சோதனை நடத்தினாலும் அது ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகவே கருதப்படும். அதற்காக வடகொரியா வருத்தப்பட வேண்டியது இருக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.மேலும் வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதனிடையே வடகொரிய அரசு சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என வடகொரியாவின் நெடுநாள் நட்பு நாடான கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ கருத்து தெரிவித்திருக்கிறார். தங்களுடைய தொழில்நுட்ப முன்னேற்றம் அறிவியல் முன்னேற்றம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காண்பித்திருக்கின்ற வட கொரியர்கள், இனி சற்று பொறுமை காக்க வேண்டும் என்று அவர்ட் கூறியுள்ளார். மேலும் அணு ஆயுத யுத்தம் ஒன்று வெடிக்குமானால் சரித்திரத்தில் மிகவும் அபாயகரமான அமெரிக்க அரசாங்கமாக அதிபர் ஒபாமாவின் அரசாங்கம் அவப்பெயருக்கு உள்ளாகும் என்று காஸ்ட்ரோ எச்சரித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications