இங்கிலாந்து பெண் கற்பழித்து கொலை -தப்பி செல்ல முயன்ற ஆலந்து நாட்டுக்காரர் கைது
ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் படகு வீட்டில் தங்கி இருந்த இங்கிலாந்து பெண் கற்பழித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, தப்பி செல்ல முயன்ற ஆலந்து நாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் பிரபல தால் ஏரி உள்ளது. சுற்றுலா இடமான இங்கு தண்ணீரில் மிதக்கும் படகு வீடுகள் ஏராளமாக உண்டு. இதில் சுற்றுலா பயணிகள் தங்கி பொழுதை உல்லாசமாக கழிப்பார்கள்.
ஒரு படகு வீட்டின் ஒரு அறையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 24 வயது பெண் சாரா எலிசபெத்தும் இன்னொரு அறையில் ஆலந்து நாட்டை சேர்ந்த டேவிட் ரிச்சர்ட் (43) என்பவரும் தங்கி இருந்தனர். நேற்று காலை எலிசபெத் தங்கி இருந்த அறைக்குள், அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டும் உடைகள் கிழிந்தும் காணப்பட்டது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
அதே நேரம் இன்னொரு அறையில் தங்கி இருந்த ஆலந்து நாட்டுக்காரரை காணவில்லை. இது குறித்து படகுவீட்டின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு ஆலந்தை சேர்ந்த டேவிட் ரிச்சர்டை தேடும்பணியில் ஈடுபட்டனர்.
சில மணி நேரத்தில் அவர் பிடிபட்டார். ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக காசிகந்த் பள்ளத்தாக்கு பகுதிக்கு தப்பிச்செல்ல முயன்ற அவரை போலீசார் கைது செய்தனர்.
தனக்குள் ஏதோ ஒன்று அவளைக் கொல்லும் படி கூறியதால், கொன்றதாக குற்றவாளி கூறியுள்ளான். இந்த தகவலை காஷ்மீர் டி.ஜி.பி.அப்துல்கனி மிர் நிருபர்களிடம் தெரிவித்தார். இங்கிலாந்து பெண் கற்பழித்து கொல்லப்பட்டாரா என்ற கேள்விக்கு, ஆரம்ப கட்ட விசாரணை நடைபெறுகிறது. அவர் கொல்லபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது அறை கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மருத்துவ பரிசோதனை அறிக்கை கிடைத்தபின் மற்ற விவரங்கள் தெரியவரும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications