வன்னியர் சங்கத்தின் மாமல்லபுர சித்திரை திருவிழாவுக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டில் தகவல்
சென்னை: வன்னியர் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் நடத்தப்படும் சித்திரை பவுர்ணமி திருவிழாவுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த வராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுதாக்கல் செய்தார். அதில், வன்னியர் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று மகாபலிபுரத்தில் சித்திரை திருவிழா நடத்தி வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடத்த வன்னியர் சங்கத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்று கூறியிருந்தார்.
இம் மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் குமார் அகர்வால், நீதிபதி பால்வசந்த குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தாக்கல் செய்த மனுவில், வரும் 25-ந்தேதி மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா நடத்த அனுமதி கேட்டு வன்னியர் சங்கம் விண்ணப்பம் செய்திருந்தது. தமிழ்நாட்டில் நிலவிவரும் இரு பிரிவினருக்கு இடையேயான பதற்றம் காரணமாக சித்திரை திருவிழாவுக்கு ஏன் அனுமதி மறுக்க கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன் சித்திரை திருவிழாவுக்கு போலீஸ் அனுமதியும் மறுத்துள்ளது என்று கூறியிருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வன்னியர் சங்கத்திடம் இருந்து போலீசார் விளக்கம் பெற்று சித்திரை திருவிழா நடத்த அனுமதி வழங்குவது குறித்து வருகிற 19-ந்தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வன்னியர் சங்கத்தின் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவை பாட்டாளி மக்கள் கட்சிதான் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு இதே சித்திரை திருவிழாவின் போது வன்னியர் சங்கத்தின் தலைவராக இருக்கும் காடுவெட்டி குரு, சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசியதாக பெரும் சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications