பெங்களூர் குண்டுவெடிப்பு- பாஜகவுக்கே லாபம்: காங்கிரஸ் கருத்து
டெல்லி: கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அந்த கட்சி ஆதாயமடையவே அது உதவியாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
பெங்களூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், ஹூப்ளியில் சென்ற முறை தேர்தல் வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் குண்டு வெடித்தது. இந்த முறை மனுத் தக்கல் செய்வதற்கு முந்தைய நாள் குண்டு வெடித்துள்ளது என்று மறைமுகமாக பாஜகவை விமர்சித்திருக்கிறார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஷகீல் அகமதோ, பெங்களூரில் பாஜக அலுவலகத்துக்கு அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் நிச்சயமாக தேர்தலில் அது பாஜகவுக்குத்தான் உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இதை பாஜக நிராகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இப்படி பேசுவதன் மூலம் கர்நாடகா சட்டசபை தேர்தலில் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டனர் என்று பாஜக செய்தி தொடர்பாளர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications