ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கு: குற்றவாளி மிர்ஸா ஹிமாயத்துக்கு மரண தண்டனை

2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி நடந்த இந்த குண்டு வெடிப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர். 64 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த மிர்ஸா ஹிமாயத் பெய்க் (33) கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் புனே கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி என்.பி.தோடே தனது தீர்ப்பில், மிர்ஸா ஹிமாயத் பெய்க் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்று அறிவித்தார்.
முன்னதாக வழக்கு தொடர்பாக எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா என நீதிபதி கேட்டபோது, பதிலளித்த பெய்க், என்னை தவறுதலாக இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். உண்மைக் குற்றவாளி பிடிபடாததால் மும்பை பயங்கரவாத தடுப்பு போலீஸார் என்னை பலிகடாவாக்கிவிட்டனர். குண்டுவெடிப்பில் உயிரிழந்த 17 பேரைத் தொடர்ந்து, 18வது நபராக நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றார்.
தீர்ப்பு வாசிக்கப்பட்ட பின் பெயக் மயங்கி விழுந்தார். அவரின் மயக்கத்தைத் தெளிவித்து, தண்ணீர் கொடுத்து போலீஸார் சிறைக்கு அழைத்துச் சென்றனர். தீர்ப்பை வரவேற்று நீதிமன்றத்துக்கு வெளியே சில அமைப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லியும் இந்த குண்டுவெடிப்பில் தனக்கு தொடர்புள்ளதை சிகாகோ நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த அவர், ஜெர்மன் பேக்கரியில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக உளவு பார்த்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இப்போது அவர் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் யாசின் பட்கல், மோஷின் செளத்ரி, ரியாஸ் பட்கல், இக்பால் பட்கல், ஃபயாஸ் காஸ்கி ஆகியோருக்கும் தொடர்புள்ளது. அவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரே குற்றவாளியான மிர்ஸா ஹிமாயத் பெய்க்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, உள்நாட்டில் செயல்படும் இந்தியன் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மிர்ஸா ஹிமாயத் பெய்க்கின் உறவினர்கள், மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications