லோக்சபா தேர்தல்: 160 தொகுதிகளின் வெற்றியை தீர்மானிக்கும் ஃபேஸ்புக்
டெல்லி: வரும் லோக்சபா தேர்தல் வெற்றி தோல்வியை ஃபேஸ்புக் தான் தீர்மானிக்கப் போவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஃபேஸ்புக் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஃபேஸ்புக்கில் சொந்த விஷயங்கள் தவிர சினிமா, அரசியல் என்று பல்வேறு விஷயங்களும் அலசப்படுகிறது. இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தல் வெற்றி, தோல்வியை சமூக வலைத்தளங்கள் தீர்மானிக்கும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐ.ஆர்.ஐ.எஸ். நாலேட்ஜ் பவுன்டேஷன், இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை லோக்சபா தேர்தல் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது.

ஃபேஸ்புக்
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 160 தொகுதிகளின் வெற்றி தோல்வியை ஃபேஸ்புக் தீர்மானிக்கும் என்று ஆய்வு முடிவு கூறுகிறது.

மகாராஷ்டிரா, குஜராத் முடிவு ஃபேஸ்புக் கையில்
மகாராஷ்டிராவில் உள்ள 21 தொகுதிகள் மற்றும் குஜராத்தில் உள்ள 17 தொகுதிகளின் வெற்றியை ஃபேஸ்புக்கை பயன்படுத்துவோர் தான் தீர்மானிக்கவிருக்கின்றனர் என்கிறது ஆய்வு.

உ.பி., கர்நாடகா, டெல்லியும் ஃபேஸ்புக் தயவில்
உத்தர பிரதசேத்தில் 14 தொகுதிகள், கர்நாடகாவில் 12, மத்திய பிரதேசத்தில் 9, டெல்லியில் 5, ஹரியானா, பஞ்சாப், ராஜ்ஸதானில் தலா 5 தொகுதிகளின் முடிவுகள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவோரின் தயவில் உள்ளது.

தமிழகத்தில் 12 தொகுதிகள்
தமிழகத்தில் 12 தொகுதிகளின் வெற்றி தோல்வியை ஃபேஸ்புக் தீர்மானிக்கவிருக்கிறது. கோவை, சேலம், நெல்லை, ஈரோடு, மதுரை, விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் ஆகியவை அந்த தொகுதிகள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications