வங்கதேச கட்டிட விபத்து: இடிபாடுகளுக்கு இடையே பிறந்த இரண்டு குழந்தைகள் உயிருடன் மீட்பு!
டாக்கா: வங்க தேசத்தை உலுக்கிய கட்டிட இடிபாடு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணி பெண்கள் இருவருக்கு அங்கேயே பிறந்த 2 குழந்தைகளும் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கின்றன.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா அருகே உள்ள சவார் என்ற இடத்தி, ரானா பிளாசா என்ற 8 மாடிக் கட்டிடம் நூற்றுக்கணக்கான கடைகளுடன் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் சில நாட்களுக்கு முன்பு திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை நேற்று வரை 304ஆக அதிகரித்திருக்கிறது. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 2,348 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுள் இடிபாடுகளுக்கு இடையே பிறந்த இரண்டு குழந்தைகளும் தாயாருடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications