For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்குள் 5வது கூடாரத்தை அமைத்த சீனா.. மோப்ப நாய்ப் படையையும் களத்தில் இறக்கியது!

By Chakra
Google Oneindia Tamil News

Defiant China continues with troop-build up at LAC, erects fifth tent and deploys molosser dogs
டெல்லி: இந்தியாவுக்குள் இமயமலையின் லடாக் பகுதியில் 2 வாரங்களுக்கு முன் நுழைந்து 4 கூடாரங்களை அமைத்துக் கொண்டு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள சீன ராணுவம் இப்போது 5வது கூடாரத்தையும் அமைத்துக் கொண்டுள்ளது.

மேலும் இந்தப் பகுதியை கண்காணிக்க சீன ராணுவம் தனது மோப்ப நாய்ப் படையையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

லடாக்கின் தெளல் பேக் ஓல்டி பகுதியில் இந்திய எல்லைக்குள் 18 கி.மீ. வரை நுழைந்து சீனா இந்த அத்துமீறலை கடந்த 2 வாரமாக மேற்கொண்டுள்ளது.

5 கூடாரங்களை அமைத்துக் கொண்டுவிட்ட சீனா புதிதாக ஒரு பேனரையும் நேற்று அங்கு கட்டிவிட்டுள்ளது. அதில், "you are in Chinese side" என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.

இந்த இடத்தை 24 மணி நேரமும் சீன ராணுவ வீரர்கள் கண்காணித்துக் கொண்டுள்ள நிலையில், மிக உயரமான மலைப் பகுதிகளில் கண்காணிப்புக்கு உதவும் மோலோசர் வகை (molosser dogs) மோப்ப நாய்களையும் கண்காணிப்புப் பணியில் சீனா ஈடுபடுத்தியுள்ளது.

இந்த இடத்தில் ஊடுருவியுள்ள ராணுவ வீரர்களுக்கு ஏ.கே. 47 துப்பாக்கிகளும் பிற ஏ.கே. வகை துப்பாக்கிகளும் தரப்பட்டுள்ளன. இவர்களை மேற்பார்வையிட்டு வரும் அதிகாரிகள் வசம் சீனத் தயாரிப்பான மகரோவ் வகை துப்பாக்கிகள் உள்ளன.

இந்த விவகாரத்தில் இந்திய- சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 3 முறை பேச்சு நடத்தியும் பலன் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்து.

English summary
After incursion in Ladakh two weeks ago, Chinese roops have now erected an additional tent in the Daulat Beg Oldi (DBO) sector. The number of such structures established by China in the Indian territory have increased to five. The Chinese troops have also deployed molosser dogs to keep a vigil. According to latest reports received on Monday from the site of incursion, 70km south of Burtse in Ladakh division, a banner hoisted outside the camp reads in English "you are in Chinese side" with the People's Liberation Army (PLA) personnel maintaining a round-the-clock vigil along with the molosser dogs which are considered as the best for keeping a watch in these high-altitude areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X