சஜ்ஜான் குமார் விவகாரம்: பிதரமர் வீடு நோக்கி பேரணி கிளம்பிய சீக்கியர்கள், தடுத்து நிறுத்திய போலீசார்

1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜான் குமார் அண்மையில் விடுவிக்கப்பட்டார். இதற்கு சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதே காரணத்திற்காக சீக்கியர்கள் இன்று டெல்லியில் கூடி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கின் வீடு நோக்கி பேரணியாக கிளம்பினர்.
ஜந்தர் மந்தரில் இருந்து கிளம்பிய பேரணி நாடாளுமன்ற வீதியை அடைந்தபோது அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டது. இது தவிர பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல சீக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். மேலும் சஜ்ஜான் குமார் விடுவிக்கப்பட்டதை கண்டித்து பஞ்சாபில் ரயில் மறியல் நடந்ததால் பல மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீக்கிய கலவர வழக்கில் இருந்து சஜ்ஜான் குமார் கடந்த 1ம் தேதி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து டெல்லியில் சீக்கியர்கள் பெரிய அளவில் போராடி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டுக்கு வெளியே போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சோனியாவுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த போராட்டம் நடந்தபோது சோனியா கர்நாடகாவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
1984ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் வசித்த சீக்கியர்களுக்கு எதிராக ஒரு கும்பலை தூண்டிவிட்டது மற்றும் கொலை குற்றம் ஆகிய குற்றங்கள் சஜ்ஜான் குமார் மீது சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications