கேரளாவில் விபத்தில் பலியான தாயின் இதய வால்வுகளை தானமாக கொடுத்த சிறுவன்
திருவனந்தபுரம்: கேரளாவில் விபத்தில் பலியான தனது தாயின் இதய வால்வுகளை 11 வயது சிறுவன் தானமாக வழங்கியுள்ளான்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தவர் ராதிகா. கேரள அரசு ஊழியர். அவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் ராதிகா தனது 11 வயது மகன் விஷ்ணுவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகனுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிரே வந்த ஆட்டோ இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ராதிகா சம்பவ இடத்திலேயே பலியானார். விஷ்ணு காயங்களுடன் உயிர் தப்பினான்.
தனக்கென்று இருந்த ஒரே உறவையும் இழந்து சிறுவன் அனாதையானான். தனது தாயின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சிறுவன் முடிவு செய்தான். இந்நிலையில் சித்திரைத் திருநாள் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 2 நோயாளிகளுக்கு இதய வால்வு தேவைப்பட்டது. அதனால் மருத்துவர்கள் அச்சிறுவனை தொடர்பு கொண்டனர். இதையடுத்து சிறுவன் தனது தாயின் இதய வால்வுகளை தானமாக கொடுத்தான்.
தற்போது உறவினர்களின் பராமரிப்பில் இருக்கும் விஷ்ணுவின் தாராள மனதை பலரும் பாராட்டியுள்ளனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications