ஒல்லியானது தப்பாங்க…: டிஸ்மிஸ் ஆன குண்டுப் பெண்கள் சங்க மாஜி தலைவி விசனம்!
கலிபோர்னியா: குண்டாயிருப்பதும் அழகு தான் என்பதை உலகிற்கு புரிய வைக்க சங்கம் தொடங்கிய பெண், ஒல்லியான ஒரே காரணத்திற்காக தலைவி பதவியிலிருந்து வெளியே தள்ளப்பட்டிருக்கிறார்.
அமெரிக்கா கலிபோர்னியாவைச் சேர்ந்த ஷாடோ கிரே என்ற 49 வயது பெண்மணி, 158 கிலோ எடையுடன் பார்ப்போரைக் கிறுகிறுக்க வைத்தவர்.
தனது பிரம்மாண்ட உருவத்தில் பெருமை கொண்ட இவர், போகும் இடத்தில் எல்லாம் ஆண்கள் தன்னைக் கவனிப்பதை ஓரக்கண்ணால் ரசித்து, குண்டுப் பெண்களுக்கு வக்காலத்து வாங்கியும் பேசி வருகிறார்.

குண்டு… குண்டு… குண்டுப்பொண்ணே…
கொழுக் மொழுக் பேபியாய் குழந்தைப் பருவம் முதலே பிறரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறார் ஷாடோ. 20 வயதை எட்டியபோது போதும் போதும் என்றாகியிருந்தார் குண்டு உடலால்...

பிறந்தது குண்டுப்பெண்கள் கழகம்…
அதே வேகத்தில், 1997-ம் ஆண்டில் உலகின் முதல் குண்டுப் பெண்கள் கழகத்தைத் தொடங்கினார் ஷாடோ. இவரைப் போன்ற குண்டுப் பெண்கள் பலரும் அந்தக் கழகத்தில் ஆர்வத்தோடு சேர்ந்தனர்.

'குண்டு’ ஒன்றும் குறையில்லை…
குண்டுப் பெண்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கிய ஷாடோ, 'குண்டு' ஒன்றும் குற்றமில்லை என்று பேசி வந்தார். இதனால், குற்ற உணர்வோடு உலா வந்த குண்டு மங்கைகள் மத்தியில் இவருக்கு பெரும் புகழும் மதிப்பும் கிடைக்க ஆரம்பித்தது.

சந்தோஷத்துல இன்னும் வெயிட்…
அந்த உற்சாகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரம் கிலோரிகள் அளவுக்கு 'உள்ளே' தள்ளத் தொடங்கினார். அதன் விளைவாக மேலும் கிடுகிடுவென்று எடை எகிறியது. 158 கிலோவை தொட்டுவிட்டாராம் ஷாடோ.

வாயைக்கட்டு….
இந்நிலையில் சிவப்பு 'சிக்னல்' காட்டிய டாக்டர்கள். 'நீங்கள் உடனடியாக எடையைக் குறைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை!' என்று எச்சரித்துள்ளனர்.

எப்படி இருந்த நான்… இப்படியாகிட்டேன்
வேறு வழியின்றி, ஷாடோவின் உடம்பிலிருந்து கூடுதல் எடை அகற்றப்பட்டது. ஒரு நேரத்தில் 150 கிராம் உணவை மட்டுமே சாப்பிட முடியும் என்கிற அளவுக்கு குடலும் அறுவைச் சிகிச்சையால் குறுக்கப்பட்டது.

ஒல்லி… ஒல்லி… இடுப்பே
இவற்றின் மூலம், 107 கிலோ எடையை இழந்து 51 கிலோவுக்கு தடாலடியாக இறங்கிவிட்டார் ஷாடோ. இதில் ஒரே ஆண்டில் குறைத்தது மட்டும் 76 கிலோ.

நா இப்போ க்யூட் பொண்ணு…
பிறந்தது முதலே குண்டுப் பெண்ணாக அறியப்பட்ட ஷாடோவுக்கு தனது புதிய ஸ்லிம் தோற்றத்தில் ரொம்பப் பெருமை.

குண்டுத்தலைவி தான் சங்கத்திற்கு வேண்டும்….
அழகுப்பெண் ஆன இவருக்கு இப்போது வேறுவகையில் சோதனைகள். அதாவது ஷாடோ நிறுவிய குண்டுப் பெண்கள் கழகத்தில் இருந்தே சக குண்டுப் பெண்கள் இவரை வெளியேற்றி விட்டனர்.

கண்டுக்கவே மாட்டேங்கறாங்க…
முன்பெல்லாம் சுத்தி, சுத்தி வந்த ஆண்களும் இப்போதெல்லாம் இவரைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லையாம்...அது ஸர்ர்ர்ர்ரி!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications