உழைக்கும் மகளிர்... டெல்லியில்தான் மிகவும் குறைவு
டெல்லி: உழைக்கும் மகளிரின் எண்ணிக்கை நாட்டிலேயே டெல்லியில்தான் குறைவாக உள்ளதாம்.
இந்திய நகரங்களேயே டெல்லியில்தான் வேலைக்குப் போகும் பெண்கள் குறைவாக இருப்பதாக சொல்கிறது இந்த ஆய்வு.
டெல்லியை விட இரண்டு மடங்கு வேலை பார்க்கும் பெண்கள் கொல்கத்தா, மும்பையில் உள்ளனராம். தென்னிந்திய நகரங்களைப் பொறுத்தவரை கோவையும், பெங்களூரும் அதிக அளவிலான பெண் தொழிலாளர்களைக் கொண்டுள்ள நகரங்களாகும்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரத் தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது...

உழைக்கும் மகளிர் குறைகிறார்கள்
இந்தியாவில் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறதாம்.

5 ஆண்டுகளில் 10 சதவீதம் குறைவு
2005 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 10 சதவீத உழைக்கும் மகளிர் குறைந்துள்ளனராம்.

கிராமத்துப் பெண்கள்தான் அதிகம்
நகர்ப்புற பெண்களை விட கிராமப்புற பெண்கள்தான் அதிக அளவில் வேலைக்குப் போகிறார்களாம்.

உடல் வலுவும் கிராமத்திற்கே ஜாஸ்தி
நகர்ப்புற பெண்களுடன் ஒப்பிடுகையில், நல்ல வலுவான, உடல் திறனைப் பயன்படுத்தக் கூடிய வேலைகளை கிராமத்துப் பெண்கள்தான் அதிகம் செய்கின்றனராம்.

வீட்டுவேலை பார்ப்போர் அதிகரிப்பு
வீட்டு வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கையும் கடந்த காலத்தை விட இப்போது நன்கு அதிகரித்துள்ளது.

டெல்லியில் 10.6 சதவீதம்தான்
தலைநகர் டெல்லியில் 10.6 சதவீத வேலை பார்க்கும் பெண்கள்தான் உள்ளனர். அதுவே ஆண்களின் எண்ணிக்கை 53.1 சதவீதமாகும்.

சென்னையில் 20 சதவீதம்
சென்னை, திருவனந்தபுரத்தில் 20 சதவீத பெண்கள் வேலைக்குப் போகிறவர்களாக உள்ளனர்.

கோவையில் 25 சதவீதம்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மற்றும் பெங்களூரில் தலா 25 சதவீத உழைக்கும் மகளிர் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications