கங்கிராட்ஸ்!... தேர்வு முடிவு தெரியாமல் தவித்த தூத்துக்குடி மாணவன் பாஸ்- 1072 மார்க் எடுத்தார்!!
தூத்துக்குடி: பிளஸ்டூ தேர்வு முடிவு தெரியாமல், எடுத்த மதிப்பெண் தெரியாமல் தவித்து வந்த தூத்துக்குடி மாணவன் பாஸ் ஆனதோடு மட்டுமல்லாமல் 1072 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். இதனால் அந்த மாணவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார்.
தூத்துக்குடி டூவிபுரம் 10வது தெருவை சேர்ந்தவர் கோமதி. இவரது மகன் காளீஸ்வரன். தூத்துக்குடியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்டூ படித்து பொதுத்தேர்வு எழுதிய இவருக்கு ரிசல்ட் வரவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தில் கேட்டபோது எந்தவித பதிலும் முறையாக கிடைக்கவில்லை.
தேர்வுகளை சரியான முறையில், முறையாக எழுதியபோதும் தனக்கு ரிசல்ட் வராத காரனத்தினால் மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளேன். எனவே எனது எண்ணுக்கு உடனடியாக ரிசல்ட் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர் காளீஸ்வரன் கலெக்டர் ஆஷிஷ்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.
மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமும் மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்றுஇரவு காளீஸ்வரனின் தேர்வு முடிவை கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி அந்த மாணவன் மொத்தம் 1072 மதிப்பெண்கள் பெற்று தேறியுள்ளார். தமிழில் 183, ஆங்கிலத்தில் 165, இயற்பியலில் 172, வேதியியலில் 165, கம்ப்யூட்டர் அறிவியலில் 198, கணிதத்தில்189 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இரவோடு இரவாக இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட மாணவனுக்கும், அவரது பள்ளிக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனால் அந்த மாணவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications