இளவரசர் ஹாரியின் காதலுக்கு வந்த சோதனை: மிஸ் அமெரிக்க அழகியை மணக்கப்போகிறாரா?
நியூயார்க்: இளவரசர் ஹாரியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக 2012ம் ஆண்டின் மிஸ் அமெரிக்க அழகி தெரிவித்துள்ளார். இதனால் ஹாரியின் தற்போதைய காதல் சிக்கலில் சிக்கியுள்ளது.
சார்லஸ்- டயானா ஜோடியின் இளைய மகன் இளவரசர் ஹாரி. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் ராணுவ வீரராக களமிறங்கி தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்ட பெருமைக்குரியவர்.
இந்நிலையில் ஹாரியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக விழா ஒன்றில் 2012ம் ஆண்டின் மிஸ் அமெரிக்கா நானா மெரிவெதர் தெரிவித்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

ஹாரியும், மெரிவெதரும்...
ஹாரி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற தி ராயல் பவுண்டேசன் எனப்படும் தங்களது டிரஸ்டுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மிஸ் அமெரிக்கா 2012 அழகியான நானா மெரிவெதரும் கலந்து கொண்டார்.

அந்தஸ்து உண்டு...
6 அடி 4 அங்குலம் கொண்ட மெரிவெதர் நிகழ்ச்சியின்போது இளவரசர் ஹாரியை குறிப்பிட்டு பேசுகையில், அவர் ஆச்சரியமிக்க பணியை செய்து வருகிறார். மிஸ் அமெரிக்காவுக்கு இங்கு உயரிய அந்தஸ்து உண்டு.

கல்யாணம் கட்டிக்கலாமா..?
ஹாரியை சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவர் மணமாகாதவர். சரிதானே? நானும் மணமாகாதவள் தான். நாங்கள் திருமணம் செய்து கொண்டால் அது ஆச்சரியமாக இருக்கும் அல்லவா?

அழகாய் இருக்கிறீர்கள்...
அவர் மிக உயரமானவர். நல்ல தோற்றம் கொண்டவர் என நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அது உண்மை என தற்போது தெரிந்து கொண்டேன்' என்று கூறினார்.

சிக்கலில் காதல்...
இதனால் இளவரசர் ஹாரிக்கு காதலியாக இருக்கும் கிரெஸ்சிடா போனசுக்கு புதிய சிக்கல் உண்டாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications