150 கோடிக்கு ஏலம் போன 102 கேரட் வைரம்

Subscribe to Oneindia Tamil

ஜெனீவா: 102 காரட் எடையுள்ள வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் போனது. இது தென்ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. இந்த வைரம் ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது.

101.73 காரட் எடை கொண்ட இந்த வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் போனது. நிறம் ஏதுமின்றி வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் இந்த வைரத்தை நகை வியாபாரி ஹாரி வின்ஸ்டன் என்பவர் வாங்கியுள்ளார்.

தொடக்கத்தில் 236 காரட் எடை கொண்டதாக இருந்தது இந்த வைரம். பின் பட்டை தீட்டப்பட்டவுடன் 101.73 காரட் ஆக குறைந்தது. இதற்கு முன்பு வைரம் ஒன்று ரூ.55 கோடிக்கு ஏலம் போனதுதான் சாதனையாக கருதப்பட்டது.

தற்போது அந்த சாதனையை இந்த 102 கேரட் வைரம் முறியடித்துவிட்டது. இதேபோன்று கிறிஸ்டி ஏல மையத்தில் ஏலத்தில் விடப்பட்ட காஷ்மீர் நீலக்கல் அது ரூ.20 கோடிக்கு விலைபோனது. குறிப்பிடத்தக்கது.

19.88 காரட் எடையுள்ள இந்த நீலக்கல் பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+