திருமணத்திற்கு முன் உல்லாசம்: நிச்சயம் செய்த பெண்ணை டீலில் விட்ட வாலிபர் கைது
சென்னை: திருமணம் நிச்சயம் செய்த பெண்ணுடன் ஜாலியாக ஊர்சுற்றி உல்லாசம் அனுபவித்துவிட்டு பின்னர் திருமணத்திற்கு மறுத்த வாலிபர் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 23) தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், பழைய தாம்பரத்தை சேர்ந்த நிர்மல் (26) என்பவருக்கும் திருமணம் செய்ய கடந்த டிசம்பர் மாதம் நிச்சயம் செய்யப்பட்டது. எம்.பி.ஏ பட்டதாரியான நிர்மல், தாம்பரத்தில் பிரிண்டிங் பிரஸ் மற்றும் திருமண அழைப்பிதழ் விற்பனை செய்யும் கடைகளை நிர்வகித்து வருகிறார்.
நிச்சயதார்த்தம் முடிந்தபின்னர், நிர்மலும் மல்லிகாவும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்தனர். அப்போது அவர்கள் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மல்லிகாவை ஒருதலைபட்சமாக காதலித்த இளைஞர் ஒருவர் தவறான தகவல்களை நிர்மலின் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
இதனால் நிர்மலுக்கும், மல்லிகாகவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து தவறான தகவலை அளித்த மாணவரை அழைத்து வந்து உண்மையை கூற சொன்னார்கள். அவரும் உண்மையை கூறி மன்னிப்பு கேட்டார். இதன் பின்னர் இரு தரப்பு உறவினர்களும் கலந்து ஆலோசித்து, வரும் ஜூன் மாதம் திருமணத்தை நடத்த செய்ய முடிவு செய்தனர். ஆனாலும் நிர்மல் மட்டும் திருமணத்திற்கு சம்மதிக்கவே இல்லை. இதற்கு நிர்மலின் தாயாரும், உறவினர்களும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மல்லிகா உடனடியாக தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நிர்மலை கைது செய்தனர். தலைமறைவான அவரது தாயார் சசிகலாவை தேடி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications