உயிரை காவு வாங்கும் அனல்.. ஆந்திராவில் ஒரே நாளில் 293 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் அனல் காற்றுடன் கொளுத்தும் வெயிலைத் தாங்க முடியாமல் ஒரே நாளில் 293 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நெருப்பு மழையைப் போல அனல் காற்று வீசுகிறது. இந்த கொளுத்தும் வெயிலைத் தாங்க முடியாமல் செத்து மடிவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுவாக 115 டிகிரி முதல் 122 டிகிரி வரை வெயில் பதிவாகி இருக்கிறது. இந்த வெயிலால் கிருஷ்ணா மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர். பிரகாசம் மாவட்டத்தில் 32 ஏரும் கரீம் நகரில் 29 பேரும் நல்கொண்டாவில் 27, குண்டூரில் 26, விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 16 பேர், கம்மம் மாவட்டத்தில் 23 பேரும் வாரங்கலில் 20 பேரும் பலியாகி உள்ளனர். கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் 28 பேர் பலியாகினர்.

அனல் காற்றினால் சன்ஸ் ஸ்ட்ரோக் ஏற்பட்டு பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத் நேரு பூங்காவில் கர்ப்பிணியாக இருந்த வெள்ளைப் புலியும் வெயிலுக்குப் பலியாகி இறந்தது. அந்தப் புலியின் வயிற்றில் இருந்த 4 குட்டிகளும் இறந்து போயின. வெயில் தொடருவதால் நிலக்கரி சுரங்கம், மின் துறை மற்றும் ஊரக வேலை வாய்ப்பு தொழிலாளர்களின் பணி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்தும் மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+