ஒட்டன்சத்திரத்தில் 15 வயது மாணவியை வீட்டில் அடைத்து வைத்து 2 நாட்கள் கற்பழித்த லோடுமேன்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சைக்கிள் ஓட்டிப் பழகிக் கொண்டிருந்த பள்ளி மாணவியை லோட்மேன் ஒருவர் தனது வீட்டில் அடைத்து வைத்து 2 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள திடீர்நகரைச் சேர்ந்தவர் ரத்தினம். அவரது 15 வயது மகள் சத்திரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். 8ம் வகுப்பு தேர்வுகள் எழுதியுள்ள அவர் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டுக்கு அருகில் சைக்கிள் ஓட்டப் பழகிக் கொண்டிருந்தார்.

அவரது வீட்டுக்கு அருகில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் லோடுமேனாக இருக்கும் கருப்புசாமி(19) என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி சைக்கிள் ஓட்டப் பழகிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கருப்புசாமி மாணவியை தனது வீட்டுக்கு தூக்கிச் சென்று கற்பழித்தார். மேலும் அவரை தனது வீட்டில் 2 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார். அதன் பிறகு மாணவியை அவரது வீட்டுக்கு அருகே விட்டுவிட்டார்.

மாணவி நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து ரத்தினம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கருப்புசாமியை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+